பஞ்சர் ஒட்டுபவரை நகராட்சி தலைவர் ஆக்கிய பா.ஜ.க!

Update: 2021-03-16 12:14 GMT
நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பக்சரா நகரத்தில், பஞ்சர் ஒட்டும் தொழில் செய்பவர் நகராட்சி தலைவராக கடந்த திங்கள் அன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரேஷ் என்ற இந்துகுமார் கிம்சுரியா (25) இளம் வயதில் நகராட்சி தலைவரானவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கிம்சுரியா பல வருடங்களாக பஞ்சர் ஒட்டும் கடையை நடத்தி வருகிறார். பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது, சிறு வயதிலிருந்தே நகராட்சி தலைவராக வேண்டும் என்று கனவு கண்டேன். அது இன்று நனவாகி உள்ளது என்று கூறினார்.

போட்டியிட வாய்ப்பு கிடைத்ததும் , மிதிவண்டியில் பிரச்சாரத்தை ஆரம்பித்து வாக்காளர்களின் வாகனத்திற்கு பஞ்சர் ஒட்டியுள்ளார். தன் தோள்களில் டயரை சுமந்து வாக்கு சேகரித்துள்ளார். அவருடைய எளிய அணுகுமுறை, தனித்துவமான பிரச்சாரம் வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இரண்டாம் வார்டிலிருந்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அப்பகுதியின் சிறுபான்மையினர் சமூக தலைவராக உள்ள ரஷீத் கூறுகையில், "கிம்சுரியா இந்த நகராட்சியின் இளம் தலைவராவார். அவர் உற்சாகத்தைப் பார்க்கும்போது மக்களுக்கு சேவை செய்வதிலும் நலத்திட்ட பணிகளை கொண்டு வருவதிலும் முனைப்புடன் செயல்படுவார் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் உண்மையான ஜனநாயகத்தில் தான் ஏழை ஒருவர் நகராட்சி தலைவராக முடியும் என்றார்.

With Inputs from Times of India 

Tags:    

Similar News