"கேரள சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி MLA க்கள் மோசமாக நடந்து கொண்டதை மன்னிக்க முடியாது." உச்ச நீதிமன்றம் காட்டம்!
Court condemned supreme court
தற்போது கேரளா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி புரிந்து வந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அப்போதைய நிதி அமைச்சர் மாணியை பட்ஜெட் தாக்கல் செய்ய விடாமல் சட்டமன்றத்தில் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ க்கல் மேற்கொண்ட வன்முறையில் அங்கு இருந்த இருக்கைகளை கீழே தள்ளிவிட்டனர், மேலும் அங்கு இருந்த கணினிகள், மைக் உள்ளிட்ட பொருட்களை உடைத்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சட்டமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தது. ஆனால் இந்த வழக்கை கேரளா உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து கேரள அரசு மற்றும் பலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ள நிலையில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு இதற்கான தீர்ப்பை அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் "கேரள சட்டமன்றத்தில் வரம்பு மீறி செயல்பட்டுள்ள எம்.எல்.ஏ. க்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டதை மன்னிக்க முடியாது. பொது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ள அவர்களுடைய செயலை அவர்களுக்கு அளித்துள்ள சிறப்பு சலுகை, சட்ட பாதுகாப்பாக பார்க்க முடியாது. தங்களுடைய பணிகளை சிறப்பாகவும், எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் மேற்கொள்ளவே எம்.எல்.ஏ.,க்களுக்கு சில சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதை மீறுவதை கருத்து சுதந்திரமாக பார்க்க முடியாது." என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
Source: Dinamalar.