அக்னிபாத் திட்டம் - கொண்டுவரப்பட்ட பின்னணி என்ன? எத்தனை வருட உழைப்பு இது?
அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பை 21 ஆண்டுகளில் இருந்து 23 ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான இந்த புதிய திட்டம், பழமையான தேர்வு செயல்முறையின் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
முப்படை தளபதிகளும் இந்தத் திட்டத்தை வலுவாக ஆதரித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான ஆலோசனைக்குப் பிறகு இது அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பணியாளர்கள், சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களைக் கொண்டிருப்பதை ஆயுதப் படைகள் உறுதி செய்யும் என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்திட்டத்தில் சேரும் வீரருக்கு முதல் வருடத்தின் மாதச் சம்பளம் ரூ. 30,000 ஆகவும்,இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காம் ஆண்டில் மாத சம்பளம் ரூ.33,000, ரூ.36,500 மற்றும் ரூ.40,000 ஆக இருக்கும்.
ஒவ்வொரு 'அக்னிவீரருக்கும்' 11.71 லட்சம் ரூபாய் 'சேவா நிதி தொகுப்பாக' கிடைக்கும், அதற்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறை 90 நாட்களில் தொடங்கும்.
புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களுக்கு, ராணுவத்தில் பணிபுரியும் காலத்துக்கு, 48 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Input From: swarajyamag