காரைக்காலுக்கு அடித்த லக்! நாடு முழுவதும் 12 பகுதிகளில் பசுமை விமான நிலையம்!
"புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உட்பட நாட்டிலுள்ள 12 முக்கியமான இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும்" என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் ஆட்சி பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு உன்னதமான வளர்ச்சித் திட்டங்களை செயலாற்றி வருகிறார்.
நாட்டின் அசுர உள்கட்டமைப்பு வளர்ச்சி, இயற்கை வளங்களை பாதிக்காத வண்ணம், இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. இதன்பொருட்டு மத்திய அரசும் அணைத்து துறைகளிலுள்ள திட்டங்களில் இயற்கை வளங்களை பாதுகாப்பது என கருத்தில் கொண்டே செயல்பட்டு வருகிறது.
இதன் வரிசையில் "காரைக்கால் மற்றும் நாட்டில் உள்ள 12 முக்கியமான இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும் "என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நாடாளுமன்ற மக்களவையில் பேசியுள்ளார். அவர் மேலும் பேசுகையில் : பசுமை விமான நிலைய கொள்கை 2008ஐ இந்திய அரசு வகுத்துள்ளது. இதன் மூலம், மோபா (கோவா), நவி மும்பை, ஷிர்டி மற்றும் சிந்துதுர்க் (மகாராஷ்டிரா), கலபுர்கி, பிஜப்பூர், ஹாசன் மற்றும் ஷிமோகா(கர்நாடகா), டாடியா (குவாலியர்), குஷிநகர் (உத்தரபிரதேசம் ) மற்றும் நொய்டா (ஜெவார்), தோலேரா மற்றும் ஹிராசர்(குஜராத்), காரைக்கால் (புதுச்சேரி), தகதர்த்தி, போகாபுரம் மற்றும் ஒரவக்கல் (ஆந்திரா), துர்காபூர்(மேற்கு வங்கம்), பாக்யோங்(சிக்கிம்), கண்ணூர்(கேரளா) மற்றும் ஹோலோங்கி (இட்டாநகர்).
ஆகிய இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமையப்பெறும். என்று கூறியுள்ளார்.