கொரோனா நோய்க்கு எதிராக விஞ்ஞானிகள் சிறப்பாக செயல்படுகின்றனர் - பிரதமர் மோடி புகழாரம்.!
கொரோனா நோய்க்கு எதிராக இந்தியா போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு விஞ்ஞானிகள் உதவி செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்தொற்று நடவடிக்கைகள் குறித்து அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக என்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது கொரொனா நோய் தொற்றுக்கு ஓராண்டிற்குள் தடுப்பூசி கிடைப்பதற்கு விஞ்ஞானிகள் வழிவகை செய்துள்ளதாக கூறினார். இதன் மூலம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக நாடு போராடுவதற்கு இந்திய விஞ்ஞானிகள் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெறுவதை தேசம் விரும்புவதாகவும் அவ்வாறு இந்திய நாடு தன்னிறைவு பெறுவதில் விஞ்ஞானிகளின் பங்கு மிக முக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை நமது விஞ்ஞானிகள் வகுத்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
கொரோனா நோய்க்கு எதிராக அனைத்து துறை சார்ந்த வல்லுனர்களும் தங்களின் பங்களிப்பை அளித்து வரும் நிலையில், விஞ்ஞானிகளின் பங்கு அதிகமாக உள்ளதை பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு அனைத்து விஞ்ஞானிகளுக்கும் தனது பாராட்டை தெரிவித்தார். மேலும் கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் ஓராண்டிற்குள் கண்டுபிடித்ததைச் சுட்டிக் காட்டி அவர் பெருமிதம் கொண்டார்.