குழந்தைகளுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி : இங்கிலாந்து அரசு அனுமதி.!

Update: 2021-06-05 13:15 GMT

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பல உலக நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தும் வேகமாக நடைபெறுகிறது. மேலும் அவர்களுக்கு ஏற்றவாறு தடுப்பூசிகளின் அளவுகளையும் அவர்கள் கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டிய நிலை இல்லை உள்ளது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. 


இந்த நிலையில் தற்பொழுது இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு அரசு அனுமதியை வழங்கியுள்ளது. உலக நாடுகளில் முதலில் அமெரிக்காவில் தான் 12 முதல் 15 வயதுடைய சிறுவர் மற்றும் சிறுமியரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதேபோல், ஐரோப்பிய ஒன்றியமும் 12 முதல் 15 வயதுடையோர் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதித்துள்ளது. 


ஆனால், பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கே தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர், சிறுமியருக்கும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை. 12 வயது முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இங்கிலாந்து அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News