மெக்சிகோ நாட்டில் விவசாய நிலத்தில் பூமி உள்வாங்கி பெரிய பள்ளம் : அதிர்ச்சியில் மக்கள்.!

Update: 2021-06-05 13:22 GMT

மெக்சிகோ நாட்டில் உள்ள பியூப்லா மாகாணத்தில் சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியதில் பெரிய பள்ளம் தோன்றியது. இது இயற்கையாக தோன்றியுள்ள பெரிய பள்ளம் என மக்கள் கூறியுள்ளார்கள். இதுவரை இப்படிப்பட்ட பள்ளம் இங்கு இல்லை எனவும், இப்போது தான் இது ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் அங்குள்ள வேளாண் நிலங்களில் வேலை பார்க்கும் மக்கள் பூமி உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டதையடுத்து பீதியடைந்தனர். 


இது சாதாரண பள்ளம் அல்ல. சுமார் 300 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட பள்ளம் உருவாகியுள்ளது. இதனையடுத்து ஏதோ பூகம்பம் வெடிக்கப் போகிறது என்று மக்கள் அந்தப் பகுதியை விட்டுத் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். அந்த கிராமத்தில் உள்ள மக்களின் வதந்திகள் காரணமாக பூகம்பம் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் மேலும் பயத்தில் உள்ளார்கள். ஆனால் பள்ளம் விழுவதற்கு முன் பயங்கர சப்தத்துடன் இடி, இடித்ததாக அந்த வேளாண் நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 


வழக்கமான இதுபோன்ற செயல்களில் நடந்ததில்லை, பூமி குலுங்குவது போன்று நிலநடுக்கம் ஏற்படும் என்றும் இது போன்று இதுவரை நடந்தது இல்லை எனவும் மக்கள் கூறியுள்ளார். ஒருவழியாக பயம் விலகிய மக்கள் பிறகு பள்ளத்தை கொஞ்சம் தயக்கத்துடனும் எச்சரிக்கையுடனும் சென்று பார்த்தனர். குறிப்பிட்ட இடத்துக்குக் கீழே பூமியில் பாறைகள் குறைவாக இருப்பதும் தெரியவந்தது. பிறகு அங்குள்ள அரசாங்கத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பெயரில், திடீரென நீரோட்டம் ஏற்பட்டாலும் இப்படி பள்ளம் தோன்றும் என்று புவியியல் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News