உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு செல்வதில் இதன் பங்கு மிகவும் முக்கியம்.!

Update: 2021-06-10 01:48 GMT

ஒரு மனிதனின் உடலில் ஹீமோகுளோபின் சரியான அளவில் இருந்தால் மட்டும்தான், அவர்களுடைய மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை எந்தவொரு பிரச்சனை இன்றி சரியாகச் செய்யமுடியும். உடலின் பல்வேறு உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுவதில் ஹீமோகுளோபின் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான், ஹீமோகுளோபின் முறையான வரம்பிற்குள் இருக்கவேண்டியது அவசியம் ஆகும். ஹீமோகுளோபின் அளவை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கு கீழ்க்கண்ட உணவுகளின் மூலம் பெறலாம். 


இரும்பு, தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுடன் நிறைந்துள்ள பீட்ரூட்கள் சிவப்பு ரத்த அணுக்களை சரிசெய்யவும் மீண்டும் செயல்படுத்தவும் உதவுகின்றன, இதனால் ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்கும். கேரட், ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றை விட பீட்ரூட் சாறு குறைந்த ஹீமோகுளோபின் அளவை எதிர்த்துப் போராட ஒரு சிறந்த தீர்வாகும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதில் இரும்புச் சத்து மட்டும் அதிகமல்ல, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துடன் ஃபோலிக் அமிலம் போன்றவையும் அதிகம் உள்ளது. ஆரோக்கியமான இரத்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த ஒவ்வொரு நாளும் பீட்ரூட் சாறு குடிப்பது சிறந்தது. 


வைட்டமின் C, இரும்பு, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக உள்ள அஸ்கார்பிக் அமிலம் மாதுளையில் உள்ளது, இது இரத்த எண்ணிக்கையை சீராக்க உதவுகிறது. ஒருவரின் அன்றாட உணவில் இதனை சேர்க்கும்போது ஹீமோகுளோபின் அளவு உயரும். பயறு வகைகளில் குறிப்பிடத்தக்க அளவு புரதம், நார்ச்சத்து, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், ஃபோலேட் மற்றும் மாங்கனீசு போன்றவை உள்ளன. உடலில் அத்தியாவசிய இரும்புச்சத்துக்கு தினமும் ஒரு கப் பருப்பு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 


Similar News