சிங்கப்பூரில் வீரியம் குறையாமல் இருக்கும் கொரோனா : பாதிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு.!

Update: 2021-06-10 12:41 GMT

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் முதல் அலையில் இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாக உருவானது. காரணம் இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாறி தன்னுடைய முழு ஆதிக்கத்தையும் செலுத்தத் தொடங்கியதும். இந்த கொரோனாவுக்கு 'டெல்டா வைரஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டெல்டா வைரஸ் பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. பிரிட்டனில் தற்போது உள்ள கொரோனா வைரஸ் இதுபோன்று ஒன்றுதான் என்றும் கூறப்படுகிறது அதாவது டெல்டா வைரஸ் பரவி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 


இதைப்போன்ற ஒரு சூழ்நிலையில்தான் தற்பொழுது சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூருக்குள் பரவி வரும் கொரோனா வகைகளில், பிரிட்டனில் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் வைரஸ் முன்னிலை வகிப்பதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தற்பொழுது தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சம் இது பற்றிக் கூறுகையில், "கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி, சமூகப் பரவல் மூலம் 449 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில், டெல்டா வகை கொரோனா வைரஸ் தாக்கம், 428 பேருக்கு ஏற்பட்டுள்ளது. 9 பேருக்கு பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பீட்டா வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த பரிசோதனையில் தெரியவந்தது. 


இதன்மூலம் சிங்கப்பூரில் டெல்டா வகை வைரசின் தாக்கம் மிகவும் கடுமையான உள்ளது. சிங்கப்பூரில் முதல்முறையாக டெல்டா வகை வைரஸ் கடந்த மாதத் தொடக்கத்தில் தான் கண்டறியப்பட்டது. தற்போது அதன் பரவல் மிகத் தீவிரமாகவுள்ளது" என சிங்கப்பூர் அரசாங்கம் சார்பில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் மட்டுமன்றி, பிரிட்டனிலும் டெல்டா வகை வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News