கொரோனா தடுப்பூசியின் இலக்கை எட்ட முடியாமல் தவிக்கும் ஏழை நாடுகள்!

Update: 2021-06-11 12:35 GMT

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி பல நாடுகளையும் மற்றும் மக்களையும் படாதபாடு படுத்திக் கொண்டு வருகிறது. சீனாவில் தோன்றி தற்பொழுது உலகின் பல நாடுகளில் தங்களுடைய முழு ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரே தீர்வு தடுப்பூசி என்பதை உலக நாடுகள் உணர்ந்து கொண்ட பிறகு, தடுப்பூசிகளை உருவாக்கும் பணிகளை துரிதப்படுத்தி பல்வேறு நாடுகளில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் விரைந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் சில நாடுகளில் தடுப்பூசி கிடைக்காத ஒரு சூழ்நிலை தான் உள்ளது. இதில் மிகவும் ஏழை நாடுகளாக இருக்கும் நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் பத்தில், ஒன்பது நாடுகளுக்கும் இன்னும் தடுப்பூசி சென்றடையவில்லை என்பது கவலைக்கிடமானது. 


ஆப்பிரிக்க நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாமல் தவிக்கின்றன என உலக சுகாதார அமைப்பு தற்பொழுது தெரிவித்துள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அதிகப்படியாக கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன. ஆனால், ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் தான் இன்னும் நிலவுகிறது.


இந்நிலையில், ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மாட்சிடிசோ மொய்தி இதுகுறித்து கூறுகையில், "தற்போது இங்கு தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பூசி இலக்கை எட்ட முடியாமல் தவிக்கின்றனர். ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தங்கள் மக்கள்தொகையில் 10 சதவீதம் பேருக்குக் கூட கொரோனா தடுப்பூசியைச் செலுத்த முடியாது. ஆப்பிரிக்க மக்கள் தொகையில் 10ல் ஒரு பங்கினருக்கு தடுப்பூசி செலுத்த சுமார் 2.5 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். எனவே ஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். 

Similar News