சுற்றுலா பயணிகள் இனி இதை செய்யத் தேவையில்லை : கனடாவின் திடீர் அறிவிப்பு!

Update: 2021-06-11 12:38 GMT

பல்வேறு உலக நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களில் பாதிப் பேருக்கு தடுப்பூசியை செலுத்தி கொண்டு தன் நோக்கமாகக் தற்பொழுது பல்வேறு வருவாய் தரும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது கனடா அரசாங்கம் சுற்றுலா துறையில் கவனத்தை செலுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 


கனடாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறுவதாவது, "கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கனடா வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. மற்றவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழைக் கனடாவில் நுழைவதற்கு முன்னர் பெற்றிருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கொரோனா தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.


இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக கனடாவில் 61% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற பட்டியலில் இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன எனவே இந்த நாடுகள் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன. 

Similar News