பிரிட்டனில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ்.!

Update: 2021-06-12 12:30 GMT

தற்பொழுது உள்ள கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு மாறுபாடுகளை அடைந்து வெவ்வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கடந்த மாதம் ஜனவரியில் உலகம் முழுவதும் தம்முடைய கொடூர முகத்தை காட்ட தொடங்கி இன்றுவரை அதனுடைய தாக்கத்தில் இருந்து வெவ்வேறு மாறுபாடுகளை அடைந்துள்ளது. மேலும் பல்வேறு அலைகளின் காரணமாக மக்களை படாதபாடு படுத்துகிறது. தற்போது உலகம் முழுவதும் வைரஸின் இரண்டாவது அலை நடைபெற்று வருகிறது. முந்தைய வைரசைக் காட்டிலும், இப்போது 60% அதிகமாக பரவக்கூடியது என பிரிட்டிஷ் அரசு தற்போது தெரிவித்துள்ளது.


பிரிட்டிஷ் அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில், "உருமாறிய வகை வைரஸ் தற்போது ஐரோப்பா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது உள்ள இந்த வகை வைரஸ் 60% அதிகமாக பரவக்கூடியதாக இருக்கிறது. தென்கிழக்கு இங்கிலாந்தின் கென்ட் நகரில் அடையாளம் காணப்பட்ட ஆல்பா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது, ​​இந்த வகை சுமார் 60% வீடு, சமூகப் பரவலுக்கான அபாயத்துடன் தொடர்புடையது" என்று இங்கிலாந்தின் புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.   


இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி ஜென்னி ஹாரிஸ் கூறுகையில், "நேற்றைய புதிய தொற்று 7,393 ஆக உயர்ந்துள்ளன. இந்த புதிய வழக்குகளில் 90% டெல்டா வைரஸ் உட்பட்டவை தான். இதனால் வரும் நாட்களில் மீண்டும் கடுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்றார். பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், "டெல்டா வகை வைரசின் அதிவேகப் பரவலால், ஜூன் 21ம் தேதி அறிவிக்கப்பட இருந்த ஊரடங்கு தளர்வுகள் நீட்டிக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News