'எங்களோட தடுப்பூசியை போட்டுக்கோங்க' : தைவானை கெஞ்சும் சீனா, தயக்கம் காட்டும் தைவான் மக்கள்!

Update: 2021-06-12 12:45 GMT

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தடுப்பூசிகளின் கையிருப்பை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகள் தன்னுடைய அண்டை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியும் வருகிறது. அந்தவகையில் தற்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள தைவான் நாட்டு மக்களுக்கு சீனா தனது அழைப்பை விடுத்துள்ளது. 


சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தைவானை உயர்ந்த மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. தற்சமயம் தைவான் நாடு உள்நாட்டு தொற்றுநோய் அதிகரிப்பின் காரணமாக மிகவும் கடுமையான முறையில் நோய் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த சமயத்தில் அந்த நாட்டிற்கு தடுப்பூசி தேவை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இருந்தாலும், தைவான் அரசு சீனாவின் தடுப்பூசிகளை பயன்படுத்துவதில் தயக்கம் கட்டிப் வருகிறது. இதையடுத்த சீனா ஜனநாயக ரீதியாக தைவான் தீவுக்கு தடுப்பூசிகளை அனுப்ப பலமுறை முன்வந்துள்ளது.


ஆனால் சீன தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு அவற்றைப் பயன்படுத்தவும் அந்நாடு அனுமதிக்கவில்லை. தைவானின் 23.5 மில்லியன் மக்களில் சுமார் 3% மக்கள் மட்டுமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "சீனாவின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தைவான் நாட்டுமக்கள் தைவானுக்கும், சீனாவிற்கும் இடையே பயணம் செய்யவேண்டும். மேலும் இந்த பயணம் செலவில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அதற்கான செலவும் அதிகமாக நேரிடும் என்ற காரணத்தினால் பல மக்கள் இதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள்" என்று தைவான் நாட்டை சேர்ந்த ஒரு அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Similar News