உலக அளவில் பல நாடுகள் தங்களுடைய கையிருப்பில் உள்ள அணு ஆயுதங்களை எண்ணிக்கையில் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றைப் பற்றித் சுவீடனை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்திகளில் கூறப்பட்டுள்ளது. உலக நாடுகளில் சீனா, பாகிஸ்தான் குறிப்பாக தன்னுடைய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
இந்த ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, தற்பொழுது 2021 ஆம் ஆண்டில் சீனாவிடம் 350 மற்றும் பாகிஸ்தானிடம் 165 அணு ஆலைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற ஆண்டை விட இது அதிகம் என்றும் அந்த அமைப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே தொடர்ந்து தன்னுடைய அணு ஆயுதங்களை அதிகரித்து வரும் நாடுகளின் பெயர்களை இந்த ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள 9 நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா நாடுகளிடம் மொத்தமாக சுமார் 13,080 அணு ஆயுதங்கள் உள்ளன.
இவற்றில் 90% அணு ஆயுதங்களை மட்டும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் கையிருப்பில் உள்ளது. ரஷ்யாவிடம் 6,255 மற்றும் அமெரிக்காவிடம் 5,550 அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை தவிர்த்து மற்ற நாடுகளும் அணு ஆயுதங்களை தயாரிப்பதுடன், புதிய ஆயுதங்களை உருவாக்கும் முயற்சித்து வருகின்றன. சீனா தனது அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி விரிவுபடுத்தி வருகிறது. அதேபோல், இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சென் கூறுகையில், "பனிப்போர் முடிவுக்கு பின்னர், சர்வதேச அளவில், அணுஆயுத கையிருப்புகள் குறைந்து வந்த நிலையில், தற்போது சர்வதேச ராணுவ கையிருப்புகளில் அணு ஆயுதங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது" என்று கூறியுள்ளார்.