தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை உண்ணும் போது கிடைக்கும் நன்மைகள் ஏராளம். சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. பெரிய வெங்காயத்தை காட்டிலும் சிறிய தினமும் ஒரு சின்ன வெங்காயம் எடுத்து கொள்ளும் போது இரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய கொழுப்பை கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இரவு தூங்கும் முன்பு ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதினால் உடல் வலிமை பெறும். நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பாக இதனை எடுத்து கொள்ளும் போது நல்ல பலன் கிடைக்கும். இதில் அதிகமான அளவு யூரிக் அமிலம் சேருவதன் காரணமாக தான் நமக்கு சிறுநீரக கற்கள் உண்டாகிறது. இதற்கு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வரும்போது யூரிக் அமிலத்தால் ஏற்படும் கற்கள் கரைந்து விடும். முதுமையில் ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் இடுப்பு வலிக்கு சின்ன வெங்காயத்தை தொடர்ச்சியாக எடுத்து வரும்போது இது போன்ற பிரச்சனைகள் வராது.
காலநிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு இருமல், நெஞ்சு சளி, நுரையீரலில் அலர்ஜி, மூக்கடைப்பு போன்ற தொல்லைகள் வரும். அதற்கு இரவு தூங்கும் முன்பு தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு விட்டு படுக்கும் போது இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவு தூங்குவதற்கு முன்பாக சின்ன வெங்காயத்தை சாப்பிட்டுவர நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல்எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.