கொரோனாவின் கூடாரமாக மாறி வரும் டோக்கியோ ஒலிம்பிக் பகுதி: பாதிப்பு எண்ணிக்கை உயர்வு!

Update: 2021-07-22 13:01 GMT

ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள சூழ்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் நடைபெறும் இடம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் ஏற்கனவே அங்கு இருந்த வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்பொழுது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்னும் சில நாட்களில் தொடங்கி நடைபெற இருக்கிறது. 


ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை அடுத்து அந்த நபர் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். 


இந்தச் சூழலில் முதல்முறையாக ஒட்டு மொத்த வீரர்களும் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திலேயே கொரோனா தொற்று ஊடுருவியது இருப்பது வீரர்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக வந்த 2 வீர‌ர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 87 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Similar News