பல்வேறு கொரோனா வைரஸ்களை சமாளிக்கும் தடுப்பு மருந்து: கனடா விஞ்ஞானிகள் தகவல்!

Update: 2021-07-27 12:55 GMT

உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் பல்வேறு அலைகளை எதிர்கொண்டு வருகின்றன. எனவே இவை அனைத்திற்கும் தடுப்பூசி ஒன்று தான் அனைத்திற்கும் தீர்வாக அமைந்துள்ளது. அதிலும் தடுப்பூசிகள் தற்போது உருமாறும் கொரோனா வைரஸ்களை தடுக்குமா? அல்லது எதிர்காலத்தில் வர இருக்கும் நோய் தொற்றுகளை மனிதர்களிடமிருந்து தடுக்குமா? என்பது போன்ற பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது கண்டுபிடிக்கப் படும் தடுப்பூசிகள் அனைத்தும் பல்வேறு வகையான கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதமாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. 


அந்த வகையில் தற்போது கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் ஆபத்தான டெல்டா ரகம் முதல் பல்வேறு ரகங்களுக்குத் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஓர் பாதுகாப்பான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

தங்களது இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர். அதாவது தற்போது அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் டெல்டா வைரஸ் முதல் எதிர்காலத்தில் வர இருக்கும் வரை அனைத்து வைரஸ்களை அழிக்கும் திறன் கொண்ட முறை தடுப்பூசி நாங்கள் கண்டுபிடித்த முறையின்படி விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். 


மேலும் இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை தற்போது புரோட்டோ ரிசர்ச் என்கிற இதழில் வெளியாகி உள்ளது. இதில் விஞ்ஞானிகள் கூறுவது, கொரோனா வைரஸின் 27 ரகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சாம்பிள்கள் இதற்காக ஆராயப்பட்டது.

குறிப்பாக புரதத்தை கொண்டு வைரஸை அழிக்கும் புதிய மருந்து கலவையை இவர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் வைரல் புரோட்டின். தற்போது முதல் இது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது இதற்கு விரைவில் அனுமதி கிடைத்தால் தடுப்பூசிகளை முழுமையாக உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News