தடுப்பூசியை கட்டாயமாக்கிய பிரான்ஸ்: சுதந்திரம் பறிக்கப்படுவதாக மக்கள் போராட்டம்!

Update: 2021-07-27 12:56 GMT

உலகில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்துவதை குறித்து பல்வேறு முயற்சிகளை அந்தந்த நாட்டு அரசாங்கம் எடுத்து வருகிறது. ஏனென்றால் தடுப்பூசி தான் மக்களில் நோய் தொற்று பரவும் முற்றிலுமாக கட்டுப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதற்காக மக்களிடம் தடுப்பூசியை கட்டாயமாக்குவது குறித்து பல்வேறு அரசாங்கங்கள் யோசித்துக்கொண்டு வரும் நிலையில், தற்போது பிரான்ஸில் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்த மசோதா பார்லிமென்டில் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. 


அந்த வகையில் தற்போது "அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்" என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. ஏனெனில், பிரான்சில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மக்கள் மட்டும்தான் வெளியிடங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளார்கள். குறிப்பாக ஹோட்டல், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி சான்றுகளும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது திடீரென தடுப்பூசியில் கட்டாயமாக்குவது தொடர்பாக பல்வேறு தரப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சின் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் தெரிவிக்கையில், "எங்களின் அடிப்படை சுதந்திரம் பறிக்கப்படுகிறது. எனவே உடனடியாக மசோதாவை திரும்பப் பெற வேண்டும்" என அவர்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். 


Similar News