மனநலம் மற்றும் உடல்நலம் இரண்டையும் பாதுகாக்க செய்ய வேண்டிய மாற்றம்!

Update: 2021-07-28 00:30 GMT

ஒருவர் உடல் நலமானது அவருடைய நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. எனவே, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க குடல் ஆரோக்கியம் இன்றியமையாதது 70-80 சதவீத நோயெதிர்ப்பு செல்கள் குடலில் காணப்படுகின்றன. தயிர், அரிசி கஞ்சி, மற்றும் மோர் போன்ற பல்வேறு உணவுகளை தினமும் உங்கள் அன்றாட உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.


மஞ்சள், குர்குமின் எனப்படும் மிகவும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவை கொண்டது. மஞ்சள் என்பது ஒரு சிறந்த மசாலா ஆகும். இது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும். ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு வைட்டமின் D மிகவும் அவசியம். நவீன வாழ்க்கை முறையால் நம்மில் பெரும்பாலோருக்கு வைட்டமின் D குறைபாடு ஏற்படுகிறது. தினமும் 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளுங்கள். சாலடுகள் மற்றும் இலை காய்கறிகள் மற்றும் புதினா, கொத்தமல்லி, துளசி, முருங்கை கீரை ஆகியவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் வைட்டமின் D அளவை உயர்த்த முடியும்.


உங்கள் உடல் அழுத்தத்தை எதிர்த்துப் போராட தியானம் மற்றும் உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். மன அழுத்தம் உங்கள் உடலிலும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திலும் கடுமையாக எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே சுவாசப்பயிற்சிகள் மூலம் உங்கள் நுரையீரலை பலப்படுத்த முடியும். நாள்பட்ட மன அழுத்தத்தை சரிசெய்ய, தினமும் உடற்பயிற்சி செய்வதையும், சரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதையும், யோகா மற்றும் பிராணயாமா போன்ற மூச்சு பயிற்சிகளையும் உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். 


Similar News