விரைவில் ஆந்திர போக்குவரத்து கழகத்தில் திருப்பதி தரிசன டிக்கெட் கிடைக்கும் !

Update: 2021-12-09 11:30 GMT

ஆந்திர பிரதேச போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் இனி திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


கொரோனோ முதல் அலை துவங்கியது முதலே திருமலையில் தரிசனத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தரிசன டோக்கன் இருந்தால் மட்டுமே திருமலைக்கு பேருந்தில் கூட பயணிக்க இயலும் அப்படி இருந்தது கட்டுப்பாடுகள். தற்பொழுது கொரோனோ எண்ணிக்கை குறைய துவங்கியவுடன் திருப்பதி தேவஸ்தானமும் தனது கட்டுப்பாடுகளை தளர்த்த துவங்கியுள்ளது, அதே சமயம் கொரோனோ பரவல் கட்டுப்பாடு'களையும் கடுமையாக பின்பற்றி வருகிறது.

இந்நிலையில் பஸ் டிக்கெட் உடன் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்க உள்ளனர். அதன்படி, நாள்தோறும் ஆயிரம் டிக்கெட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து புறப்படும் ஆந்திர அரசு பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஏசி பஸ்களில் திருப்பதிக்கு செல்ல முன்பதிவு செய்யும் போது கூடுதலாக ரூ 300 கட்டணம் செலுத்தினால் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டும் வழங்கப்படும்.

விரைவில் இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் சென்னை, வேலூரில் தினமும் 1000 டிக்கெட்டுகள் ஒரு மாதத்துக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Source - Maalai malar

Similar News