வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்திற்கு நேரடியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதற்கான ஆலோசனை நடந்து வருவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அதன் தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்கள் இணையவழி முன்பதிவு மட்டுமே செய்து அதன் பிறகு அனுமதிக்கப்பட்டு வந்தனர். நேரடியாக தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் அடுத்த பிப்ரவரி மாதத்திற்கான 300 ரூபாய் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்ட உடனே விற்று தீர்ந்தன. அடுத்தபடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு பத்தாயிரம் வீதம் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரை உள்ள மொத்தம் 1.50 லட்சம் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆன்லைன் இல்லாமல் நேரடியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின எண்ணிக்கை கணக்கில் கொண்டு வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நேரடியாக முன்பதிவு இன்றி வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்ற ஆலோசனையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் முன்பதிவு இன்றி பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரலாம்.