பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம்தான் நான் பிழைக்க உதவுகிறது - டிஜிட்டல் முறையில் யாசகம் பெறும் நபர்

Update: 2022-02-09 14:00 GMT

பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவின் ஆதரவாளரான ராஜீவ் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஈர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் யாசகம் பெறுகிறேன் என பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அமலுக்கு வந்த பிறகு தெரு ஓரத்தில் காய்கறி விற்பவர், பூ விற்பவர் என அனைத்து சாலையோர வியாபாரிகள் டிஜிட்டல் முறையில் பணம் வாங்கிக் கொள்கின்றனர். கியூ ஆர் கோட் அடங்கிய அட்டையை தங்கள் கடை முன்வைத்து தங்கள் வியாபாரத்தை தடையின்றி செய்து வருகின்றனர்.


இந்நிலையில் பீகாரில் உள்ள ராஜு பட்டேல் என்ற வழிப்போக்கர் டிஜிட்டல் முறையில் யாசகம் பெற்று பிழைத்து வருகிறார். இதுபற்றி அவர் கூறும் பொழுது, "நான் பிரதமர் மோடியின் மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியை கேட்கத் தவறுவதில்லை நான் டிஜிட்டல் முறையில் யாசகம் பெற்றுக்கொள்கிறேன். யாசகம் பெற்று முடிந்த பிறகு ரயில்வே நிலையத்தில் படுத்துக்கொள்கிறேன். எனக்கு வாழ வழி தெரியாமல யாசகம் செய்கிறேன், பலர் பணம் கையில் இல்லை, சில்லறையாக இல்லை எனக் கூறும் போது இந்த டிஜிட்டல் முறை எனக்கு யாசகம் பெற உதவியாக இருக்கிறது இதனால் என் பிழைப்பும் ஓடுகிறது" என விளிம்புநிலை மனிதரான ராஜு பட்டேல் தெரிவித்துள்ளார்.



Source - Junior Vikatan

Similar News