உக்ரேன், ரஷ்யா போர் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா?
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், அதன் பாதிப்பு உலகப் பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ளது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்பூர் பின்னலாடையில் இருந்து சுமார் 30 சதவீத ஏற்றுமதி நடைபெறுகிறது. அதே சமயம் வருகின்ற நாட்களில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஷ்யா தற்போது உக்ரைன் மீது கடுமையான போரை நடத்தி வரும் நிலையில் அங்கு நிலைமை சற்று மோசமடைந்துள்ளது.
வெளிநாட்களை சேர்ந்தவர்கள் உயிர்களை கையில் பிடித்தபடி மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை கடுமையாக்கியுள்ளார். உக்ரைன் சமாதானத்திற்கு வந்தால் போர் கைவிடப்படும் எனவும் புடின் கூறி வருகின்றார். ஆனால் அதனை உக்ரைன் அதிபர் ஏற்க மறுத்துள்ளார். இதனால் போர் மேலும், தீவிரமடையும் நிலையில் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்குமாறு புடின் உத்தரவிட்டார். இதனால் உலக நாடுகளின் பார்வை உக்ரைன் மீது திரும்பியுள்ளது. இதனால் ரஷ்யாவின் பங்குச்சந்தைகளின் மதிப்பு 50 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும், ரஷ்யாவை தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா, ஐப்பான், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ரஷ்யா, உக்ரேன் போரால் தங்கத்தின் விலையும், கச்சா எண்ணெயின் விலையும் உயரத் தொடங்கிவிட்டது. இதன் எதிரொலியாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தற்போது கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 30 சதவீத அளவுக்கு பின்னலாடை ஏற்றுமதி நடைபெறுகிறது. அதன் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது.