இந்திய பெருங்கடலில் சீன ராக்கெட் உதிரி பாகங்கள்? மக்களின் உயிருக்கு உலை வைத்த விண்வெளி திட்டம்!

Update: 2022-08-01 07:33 GMT

சீனா, விண்வெளியில்  டியாங்காங் என்ற ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான 23 டன் எடை உடைய பொருட்களை ஏற்றிக்கொண்டு சீன ராக்கெட் கடந்த வாரம் புறப்பட்டது. 

அதன் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இருப்பினும், செயற்கைக்கோள் விரும்பிய திசையில் செல்ல உதவும் பூஸ்டர் பாகங்களும், ராக்கெட்டின் மின்னணு கழிவுகளும், புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சீனா தெரிவித்தது.

ராக்கெட்டின் உதிரி பாகங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்தது. எந்த பகுதியில் விழும் என்பது கணிக்க முடியாமல் போனது. பூஸ்டர் பாகங்கள் மிகப் பெரியதாக இருப்பதால், புவி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பல் ஆகாது.

அவை பூமியை தாக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இருப்பினும், ஞாயிறு அதிகாலை புவி மண்டலத்தில் நுழைந்ததும் பூமிக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாத வகையில் பெரும்பாலான பகுதிகள் எரிந்து விட்டன. ராக்கெட்டின் இதர பாகங்கள், இந்திய பெருங்கடலிலும், பிலிப்பைன்ஸ் கடல் பகுதியிலும் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Input From: Dinamalar 

Similar News