பாகிஸ்தானில் காஸ் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லை. சிலிண்டர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மக்கள் தங்களின் சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய பிளாஸ்டிக் பலூன்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுள்ளது. கைபர் பக்துன்கவா மாகாணத்தில் மக்கள் இவ்வாறு பிளாஸ்டிக் பலூன்களில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
அங்கு 2007 முதல் மக்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட வில்லை. இதனால் சமையல் எரிவாயுவை மக்கள் பிளாஸ்டிக் பலூன்களில் இருப்பு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மானிய விலையில் ரேஷனில் வழங்கப்படும் பொருட்களின் விலையை பாகிஸ்தான் அரசு 25 முதல் 62 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.