பாகிஸ்தான் நாடே மின்சாரம் இன்றி முடங்கியது: எரிபொருள் செலவை மிச்சப்படுத்த எடுத்த முயற்சியால் விபரீதம்!

Update: 2023-01-24 02:24 GMT

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் தேசிய மின்வாரியத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து முக்கிய நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. முழுமையாக மின்சாரம் வழங்க சுமார் 12 மணி நேரம் ஆகும் என மின்துறை அமைச்சர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் சமீபத்தில் ஆற்றலைச் சேமிப்பதற்கான திட்டங்களை அறிவித்தது, டிசம்பரில், சந்தைகள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்குள் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. திருமண மண்டபங்களும் இரவு 10 மணிக்கு மூடப்பட்டன. 

மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக மின் விநியோக உள்கட்டமைப்பின் சில பகுதிகளை அதிகாரிகள் மூடினர். காலை இந்த அமைப்புகளை மீண்டும் இயக்கியபோது, ​​மின் விநியோகத்தில் அதிக ஏற்ற இறக்கம் இருந்ததால், மின் விநியோக முறை தோல்வியடைந்தது.

இதனால் நாடு முழுவதும் தண்ணீர் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடைபட்டது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன. மின் வினியோக முறையை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

Input From: DT நெஸ்ட் 

Similar News