'வந்தே பாரத்' ரெயிலை இயக்கிய முதல் பெண்மணி

ரெயில்வேயில் நவீனத்தைப் பொருத்தும் வகையில் பயணிகளுக்கு கூடுதல் சவுகரியத்தையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும் 'வந்தே பாரத்' ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயிலை இயக்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை சுரேகா யாதவ் பெற்றுள்ளார்.

Update: 2023-03-19 04:00 GMT

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தூரம் வரை சோலாப்பூர் வரை இயக்கி அசத்தினார்.இவர் ஏற்கனவே மும்பை புறநகர் ரயில் இயக்கிய முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர் . சுரேகா யாதவ் மகாராஷ்டிரா மாநிலம் சுரதா பகுதியைச் சேர்ந்தவர். விவசாய குடும்ப பின்னணியை கொண்டவர். என்ஜினியரிங் படித்தவர் .போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று ரயில்வே துறைக்குள் நுழைந்துவிட்டார்.


1989 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார் .மும்பையில் இருந்து நீண்ட தூரம் செல்லும் ரயில்களையும் இயக்கியிருக்கிறார். தற்போது அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் இயக்கிவிட்டார். வந்தே பாரத் ரயில் கடந்த பிப்ரவரி மாதம் தான் பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு மாதத்திற்கு உள்ளாகவே இந்த ரயிலை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை நினைத்து மன மகிழ்ச்சி அடைகிறேன்.


இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி என்பவர் சில தொழில்களில் ஆண்கள் மட்டுமே அதிகம் செலுத்த முடியும் என்பது தவறான கருத்து என்றும் சொல்கிறார். எந்த துறையிலும் ஆண் ஆதிக்கம் இல்லை என்றும் கூறுகிறார். "எனக்கு தெரிந்தவரை எந்த துறையிலும் ஆண் ஆதிக்கம் இல்லை .பெண்களாகிய நாம் தான் அதில் நுழைய வேண்டும் .நாங்கள் எந்த தொழிலும் சேர முடியாது என்று யாரும் கூறவில்லை .நாம் அடி எடுத்து வைத்தவுடன் அது நம்முடையதாகிவிடும்" என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.



 


Similar News