தீபாவளியை முன்னிட்டு புதிய வகையில் உருவாகி இருக்கும் மோசடிகள் கும்பல்!! மக்களே உஷார்!!
தீபாவளி என்றாலே பலருக்கும் பட்டாசு வெடிக்கும் ஞாபகம் தான் வரும். தீபாவளி வரப்போகிறது என்றால் எல்லா இடங்களிலும் பட்டாசு கடைகள் போட ஆரம்பித்து விடுவார்கள். பட்டாசு வெடிக்க ஆர்வம் உள்ளவர்கள் வெடிக்கடைகளை தேடி சென்று நிறைய பட்டாசுகளை வாங்குவார்கள். இந்நிலையில் தற்பொழுது பட்டாசுகளை விற்பனை செய்வதாக பணம் வாங்கிவிட்டு ஏமாற்றும் கும்பல் உருவாகியுள்ளது.
அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் மூலமாக தற்பொழுது மோசடிகள் நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறை போலியான வெப்சைட் மூலமாக விளம்பரங்கள் வெளியிட்டு அப்பாவி மக்களை நம்ப வைத்து பணத்தைப் பெற்று விட்டு பட்டாசுகளை அனுப்பாமல் மோசடி செய்யும் கும்பல் உருவாகியுள்ளது.
இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் கூறும் எல்லாவற்றையும் நம்பாமல் அதனுடைய உண்மையை அறிந்து அதன் பிறகு அந்த பொருளை வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் நிறைய பொதுமக்கள் ஏமாந்து அவதிப்பட்டு வருவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாரேனும் இதுபோன்று பாதிக்கப்பட்டிருந்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, சைபர் கிரைமிலோ புகார் அளிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.