பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா அதீத வளர்ச்சி!! பெருமிதத்தோடு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி!!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவானதை அடுத்து அதற்கு ஆளுநர் மாளிகையில் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான நிகழ்வை கொண்டாடுவதாகவும் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட பிரிவை சர்தார் வல்லபாய் பட்டேல் ஒன்றிணைத்தார்.
அதனால் அவருடைய பிறந்த நாளை ஒற்றுமை தினமாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் பலமாகவும் உள்ளது. ஆனால் இப்போது இந்தியா இரண்டாகப் பிரிந்து வடக்கு மற்றும் தெற்கு என உள்ளது.
மேலும் காஷ்மீரில் தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு, வடகிழக்கு பிராந்தியம் பிரிவினைவாதம் மற்றும் நக்சலைட்கள் என வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டு வந்தது. இந்த வன்முறைகளால் ஆண்டுதோறும் பல உயிர்கள் பறிபோனது. ஆனால் எப்போது பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் வன்முறைகள் வேரோடு அழிக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திலும் அமைதி நிலவுவதால், நாடு சரியான தலைமையில் இருப்பது உறுதியாகி உள்ளது. மட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக பின்தங்கி இருந்த நம் நாடு தற்பொழுது நான்காவது இடத்தில் இருப்பதாகவும் விரைவில் மூன்றாவது இடத்திற்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியாவை வரும் 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆளுநர் கூறினார். இதனை தொடர்ந்து ஆளுநர் ரவிக்கு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் விழாவில் நினைவு பரிசினை வழங்கினர்.