நீதிமன்ற உத்தரவை மீறிய ஆளுங்கட்சி!! என்னிடமே ஆதாரம் உள்ளது!! உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பு பேச்சு!!
மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி மதுரை கொடிக்குளத்தை சேர்ந்த அம்மாவாசை தேவர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சாலைகள் பொது இடங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 28ஆம் உத்தரவிட்டார்.
இது போன்ற கொடிப் கம்பங்களை அமைக்க வேண்டும் என்றால் அவரவர் சொந்த இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வைத்துக் கொள்ளலாம் எனவும் சாலை நடுவில் இருக்கும் சென்டர் மீடியங்கள் மற்றும் பாலங்கள் போன்றவற்றில் கொடி கம்பங்களை நடுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், பொதுக் கூட்டங்களில் வைக்கப்படும் கொடிக்கம்பம் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் சட்ட விரோதமாக சாலையையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இப்பொழுது தமிழக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கொடிக்கம்பம் விவகாரத்தில் வழிகாட்டுதல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக மாவட்ட வாரியாக அறிக்கை கூறியுள்ளதாகவும் கூறினர்.
இதைத்தொடர்ந்து நீதிபதி விதிமுறைகள் உருவாக்கியதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு, சாலையில் இருக்கும் சென்டர் மீடியன் பகுதிகளில் கொடிக்கம்பம் நடக்கூடாது என்று உத்தரவிட்டு எந்த அரசியல் கட்சியும் அதை மதிக்காமல் இருந்து வருகிறது. இந்த உத்தரவை தமிழக அரசு இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளது. சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சியினர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சி கொடியினை பறக்க விட்டதை தானே வாகனத்தில் செல்லும் பொழுது பார்த்து வீடியோ எடுத்ததாக நீதிபதி தெரிவித்தார்.