திமுக அரசை விடாமல் துரத்தும் தூய்மை பணியாளர்கள்!! இப்போதாவது முதல்வர் செவி சாய்பாரா??
தனியார் மயமாக்களை கண்டித்தும் வேலை நிரந்தரம் வேண்டியும் சென்னையில் தூய்மை பணியாளர்கள் பலவிதமாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்தது. தொடர்ச்சியாக பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் போன்றவற்றை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் தொடர்ச்சியாக கைது செய்து வந்தனர்.
இதுகுறித்து தூய்மை பணியாளர்களிடம் கேட்ட போது வேலை இல்லாமல் குடும்பமே சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் பட்னியாக இருப்பதாகவும், எத்தனையோ போராட்டங்கள் மேற்கொண்டும் எந்தவித பலனும் இல்லாமல் போய்விட்டது. தமிழக அரசு எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பாக சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பாக தனியார் மையம் மக்களை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நள்ளிரவில் அவர்களை குண்டு கட்டாக கைது செய்து சென்றனர்.
100 நாட்களைக் கடந்த இந்த போராட்டமானது தற்பொழுது வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு தற்பொழுது உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பத்தூரில் இருக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் இருக்கும் நான்கு பெண்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேற்றும் வரை அந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
மழை, புயல் மற்றும் கொரோனா காலகட்டத்தில் கூட அயராமல் வேலை பார்த்த நிலையில் தற்பொழுது இதுபோன்று அரசு கைவிட்டு விட்டது என்றும், குடும்பத்தின் கஷ்ட நிலையை போக்குவதற்காகவும், அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே விரைவில் தமிழக முதல்வர் இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்துள்ளனர்.