கலையும் திமுக, காங்கிரஸ் கூட்டணி...காரணம் என்ன?

By :  G Pradeep
Update: 2025-12-01 00:24 GMT

தமிழகத்தில் அதிக தொகுதியையும் ஆட்சியில் பங்கையும் திமுகவிடம் கேட்கப்போவதாக தமிழக காங்கிரஸ் தெரிவித்த நிலையில் அதற்கு திமுக செவிசாய்க்காமல் இருந்தால் தவெகவுடன் கூட்டணி அமைக்க போவதாக தகவல் வெளியாகிறது. சங்கதன் ஸ்ரீஜன் அபியான் என்கின்ற திட்டம் மூலம் நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் பணியாற்றி வரும் நிலையில் மதிப்பு மிக்கவர்களை தலைவர்களாக நியமிக்க இத்திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு வரும் சமயத்தில் டெல்லியில் இருந்து கட்சியின் தேர்தல் பார்வையாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். தமிழக காங்கிரஸில் மொத்தம் 77 மாவட்டங்களில் கோவையில் இருந்து மூன்று மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதம் 74 மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதற்காக 38 பார்வையாளர்கள் வந்துள்ளனர். 


இதற்காக பிரத்தியோக படிவமும் வழங்கப்பட்டு வரும் நிலையில் தேவையான ஆவணங்களை வைத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த பிறகு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கப்படும். இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் எனில் ஆட்சியில் பங்கும், கூடுதல் தொகுதியில் போட்டியும் இட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக உடன்படவில்லை என்றால் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 


தமிழக ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் தரப்பில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதற்காக மட்டுமே தாங்கள் வந்திருப்பதாகவும், கூட்டணி பற்றி தங்களிடம் எதுவும் பேச வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

Similar News