ரேணிகுண்டாவில் உருவாகும் ஆன்மிக நகரம்: இந்துக்களின் பெருமை!!
By : G Pradeep
Update: 2025-12-22 15:56 GMT
ஆந்திராவில் 5,000 ஆண்டு இந்து மதக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ரேணிகுண்டாவில் ஆன்மிக நகரம் அமைகிறது.
இந்து மதக் கலாச்சாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதே இதன் நோக்கம். சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான இந்து மதக் கலாச்சாரம் தொடக்கம் முதல் வருங்கால சந்ததியினரும் அறியும் வகையில் இந்நகரம் அமைகிறது.
இந்நகரத்தில் சனாதன தர்மம், இந்துக்களின் பழக்க வழக்கங்கள், ராமாயணம், மகாபாரதம் உட்பட பல்வேறு இதிகாசங்கள், இந்து புராணங்கள் இருக்கும்.
300 ஏக்கரில், ‘வாழ்வியல் கண்காட்சி நகரம்’ உருவாக்கப்பட உள்ளது. வேதத்துக்கென தனி கண்காட்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆன்மிக நகரம் அமைப்பதின் மூலம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.