இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!! சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை!!
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ) சார்பில் 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி டிச.26 முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த டிச.31ம் தேதி 6-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீஸார், 'அனுமதியின்றி கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்' உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2009 மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அடுத்த நாளான 2009 ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் PB2, 9300+GP 4200 என்ற ஊதிய நிலையும், தொடர்ந்து 1.1.2016 முதல் Level-11-ம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும் என்பதே கோரிக்கை.
போராட்டங்கள் ஒருபுறம் வலுப்பெற, அரசு தூய்மைப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியம் கோரி போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என்று அனைவரின் கோரிக்கைகளுக்கும் என்ன மாதிரியான நடவடிக்கையை அரசு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.