இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!! அரசு அழைப்பு என கூறி கைது!!
சென்னையில் ஆறாம் நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை, 'அரசு அதிகாரிகள் பேச்சுக்கு அழைத்துள்ளனர்' எனக் கூறி, அழைத்து சென்று, காத்திருக்க வைத்து, பின்னர் கைது செய்தது, ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், சென்னையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
போலீசார் தலைமைச் செயலகம் அழைத்து செல்லாமல், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, நிர்வாகிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின், பேச்சு நடத்த, அதிகாரிகளுக்கு போதிய நேரம் இல்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்தனர். சங்கத்தின் பொதுச் செயலர் ராபர்ட் கூறுகையில், "இடை நிலை ஆசிரியர்கள் ஆறு நாட்களாக போராடி வருகிறோம். ஆனால், இன்ற ளவும் எங்களை பேச்சுக்கு எங்கள் அழைக்க, அதிகாரிகளுக்கு நேரம் இல்லை."