விக்டோரியா அரங்கதில் எழுந்த கட்டணம் வசூல் சர்ச்சை!!

By :  G Pradeep
Update: 2026-01-02 13:25 GMT

விக்டோரியா அரங்கம் கட்டணமின்றி திறக்கப்பட்டு, சில நாட்களிலேயே கட்டணம் வசூலிக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையின் தொன்மையான கட்டிடக்கலைக்குச் சான்றாக நிற்கும் விக்டோரியா அரங்கத்தைக் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


விக்டோரியா அரங்கத்தைப் பார்வையிட பொதுமக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர் என மாநகராட்சி அறிவித்திருந்தது. ஆனால், திடீரென நேற்று முதல் விக்டோரியா அரங்கைப் பார்வையிட பொதுமக்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.


பொதுமக்களுக்கு 25 ரூபாயும், மாணவர்கள் மற்றும் மூத்தக்குடிமக்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.


"மக்களின் வருகையைக் குறைக்கும் இந்த நடவடிக்கை ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளனர். 

Tags:    

Similar News