சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்!!

By :  G Pradeep
Update: 2026-01-03 16:30 GMT

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ) சார்பில் சென்னையில் டிச.26 முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


8-வது நாளாக ஆசிரியர்கள் குடும்பத்தினருடன், சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.


பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் அ.மாயவன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் இடைநிலை ஆசிரியர் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்தும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News