நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது அவதூறு!! பாஜக கடும் கண்டனம்!
சென்னை புத்தகக் காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது அவதூறான புத்தகம் விற்பனை செய்ய உள்ள பதிப்பகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை செயலருக்கு பாஜக கடிதம் அனுப்பி உள்ளது.
"திருப்பரங்குன்றம் விவகாரம் -ஜி.ஆர்.சுவாமிநாதன்:நீதி பதியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவுடியா?" என்ற தலைப்பிலான புத்தகம் நீதித்துறையின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தில், நீதிபதி ஒரு கையில் சூலத்தையும், மறுகையில் காவிக் கொடியையும் ஏந்தியிருப்பது போன்ற கேலிச் சித்திரம் இடம் பெற்றுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்லாமல், இந்திய நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் செயலாகும்.
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், சம்பந்தப்பட்ட கீழைக்காற்று பதிப்பகம் மற்றும் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.