சம வேலைக்கு சம ஊதியம்! இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்!!

By :  G Pradeep
Update: 2026-01-05 07:33 GMT

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடந்து வருகிறது.


10-வது நாளாக சென்னை சிவானாந்தா சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


"கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எஸ்எஸ்டிஏ பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் இதனை தெரிவித்தார்.


விசிக தலைவர் திருமாவளவன் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, நிலுவைத் தொகையை வழங்க அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

Tags:    

Similar News