திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி!!
By : G Pradeep
Update: 2026-01-07 10:13 GMT
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தீபம் ஏற்றுவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தீபம் ஏற்றுவதால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பது அபத்தமானது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபம் ஏற்றச் செல்லும் கோயில் தரப்பு குழுவுடன் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க பொருத்தமான, அவசியமான நிபந்தனைகளை மத்திய தொல்லியல் துறை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.