அமைச்சர் நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை!! புதிய திருப்பம்!!
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத் துறை அனுப்பிய முறைகேடு புகார் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு அதிகாரிகள், ஊழியர்களை நியமித்ததில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர்.
அமைச்சர் நேரு தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை தனிப்படை அமைத்து ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. புகாரில் முகாந்திரம் இருந்தால், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, வழக்கு பதிவு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.