பாஜக அகில இந்திய செயல் தலைவர் நிதின் நபின் கோவை வந்துள்ளார். நேற்று மாலை பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில பாஜகவின் மூத்த நிர்வாகிகள், கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய நிவ் நபின், "தமிழ்நாட்டில் முன்னேறிய நகரமாக கோவை உள்ளது. கோவைக்கு வந்தே பாரத் ரயிலை மோடி வழங்கியுள்ளார். ஜவுளித்துறை, சிறு குறு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கி வருவதாகவும், ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அப்படி இல்லை என்றும் கூறினார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார். பிறகு பாஜகவின் வெற்றிக்காக சபதம் எடுத்தனர்.