க்ரோக் ஏஐ ஆபாச பட விவகாரம்!! எக்ஸ் சமூக வலைதள நடவடிக்கை!!
க்ரோக் ஏஐ மூலம் ஆபாச படங்களை உருவாக்கி வெளியிட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, எக்ஸ் சமூக வலைதளத்தில் இருந்து 3,500 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் 600 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை எக்ஸ் தளத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ் சமூக வலைதள நிர்வாகம் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு, இந்திய சட்ட விதிகளை மதித்து நடக்க உறுதி அளித்துள்ளது.
க்ரோக் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக ஆட்சேபங்கள் எழுந்துள்ள நிலையில், எக்ஸ் சமூக வலைதளம் வெளியிட்ட பதிவில், "க்ரோக் ஏஐ மூலம் ஆபாச படங்களை உருவாக்கி வெளியிட்டால் சம்பந்தப்பட்ட எக்ஸ் சமூக வலைதள கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்" என எச்சரித்துள்ளது.
இந்தியா மட்டுமன்றி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையும் க்ரோக் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக ஆட்சேபங்களை எழுப்பியுள்ளன.