பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு குறித்து தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர்!!
By : G Pradeep
Update: 2026-01-14 03:29 GMT
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா BRICS கூட்டமைப்பின் தலைமையை ஏற்க உள்ள நிலையில், அதற்கான இணையதளம் மற்றும் லோகோ வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய ஜெய்சங்கர், "மகர சங்கராந்திக்கு முன்பாக இன்று நாம் கூடி இருக்கிறோம். இந்த திருவிழா, உத்தராயணம் என்று அழைக்கப்படும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தைக் கொண்டாடுகிறது" என்றார்.
BRICS தனது உறுப்பினர்களின் தனித்துவமான அடையாளங்களை மதிக்கும் அதேவேளையில், அவர்களின் கூட்டுப் பங்களிப்புகளில் இருந்து வலிமையைப் பெறுகிறது என்றும் தெரிவித்தார்.
பிரிக்ஸ் இந்தியா இணையதளம், இந்தியாவின் தலைமைத்துவத்தின்போது ஒரு பொதுவான தளமாகச் செயல்படும் என்றும், கூட்டங்கள், முன்முயற்சிகள், முடிவுகள் குறித்த தகவல்களை வழங்கும் என்றும் தெரிவித்தார்.