குடியரசு தின விழாவுக்கு ஆட்டோ ஓட்டுநருக்கு அழைப்பு! சங்கீதாவின் சாதனைக்கு குடியரசு தலைவரின் அங்கீகாரம்!
By : G Pradeep
Update: 2026-01-14 07:16 GMT
கோவையைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதாவுக்கு குடியரசு தலைவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. வருகிற 26-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் பார்வையிடவும், குடியரசு தலைவருடன் தேநீர் அருந்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சங்கீதா, 7 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரது கணவர் கட்டிட தொழிலாளியாக உள்ளார். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டியதற்காக அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சங்கீதா, தனது கணவருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், சங்கீதாவின் சாதனைக்காக அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.