திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய பாஜகவின் புதிய தலைவர் நிதின் நபின்!!

By :  G Pradeep
Update: 2026-01-21 15:12 GMT

நிதின் நபின் பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற நிலையில் தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார்.


"அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற சாதாரண மனிதனுக்கு இவ்வளவு உயரிய பதவி கிடைப்பதற்கான வாய்ப்பை நீங்கள் வழங்கி உள்ளீர்கள்" என்று பேசிய நிதின் நபின், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்ததை கண்டித்தார்.


ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று நிதின் நபின் பேசினார்.


இன்றைய தருணம் எனக்கு ஒரு உறுதிப்பாட்டின் தருணம் என்று கூறிய நிதின் நபின், கட்சியின் சித்தாந்தம், மரபுகள் மற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

Tags:    

Similar News