திருப்போரூர் கந்தசாமி கோயில் ஆக்கிரமிப்பு வழக்கு!! உயர்நீதிமன்றம் உத்தரவு!!

By :  G Pradeep
Update: 2026-01-23 12:45 GMT

திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் சொத்துக்களில், 550 ஏக்கருக்கும் மேற்பட்ட சொத்துக்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் பி. ஜெகநாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.


இந்த வழக்கில், அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர், கோயில் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான 125 ஏக்கர் நிலத்தை 233 பேர் ஆக்கிரமித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென அறநிலையத் துறைக்கும், வருவாய் துறையினருக்கும் உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

Tags:    

Similar News