பட்டாதரி ஆசிரியர் நியமனம்.. மறு தேர்வு வேண்டாம் என அரசுக்கு கோரிக்கை!!

By :  G Pradeep
Update: 2026-01-26 15:18 GMT

பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, மறு நியமனத் தேர்வு இல்லாமல் பட்டாதரி ஆசிரியர், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 2023-ம் ஆண்டு நியமனத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 37,000 பேர் ஆசிரியர் பணிக்கு காத்திருப்பதாக கூறப்படுகிறது.


ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) 2023-ம் ஆண்டு, 3,192 பிடி, பிஆர்டிஇ காலிப்பணியிடங்களை அறிவித்தது. இதில் 2,800 காலிப்பணியிடங்களை அரசு நிரப்பி உள்ளது. மீதம் 392 பணியிடம் நிரப்பவில்லை. 726 பிஆர்டிஇ பணியிடங்கள் நிரப்பாமல் கடந்த 15 ஆண்டுகளாக காலியாகவே உள்ளன.


டிஆர்பியின் ஆண்டு திட்டத்தில் 1,205 பிடி, பிஆர்டிஇ காலிப்பணியிடங்களுக்கு மறு நியமனத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது. ஆனால், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.


முதல்வர் ஸ்டாலின், "விடியல் அரசு" என கூறுவதாகவும், ஆனால் தேர்ச்சி பெற்ற பட்டாதரி ஆசிரியர்களின் வாழ்வு இருள் சூழ்ந்து கிடப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News