வாஜ்பாயின் 101-வது பிறந்த நாள் விழாவில் நகைச்சுவையான சம்பவம் குறித்து பேசிய ராஜ்நாத் சிங்!!
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த நாளை, ‘சிறந்த நிர்வாக தினம்’ என்று மத்திய அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
வாஜ்பாய் ஒரு சிறந்த அரசியல் தலைவராகவும், கவிஞராகவும் இருந்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் ராஜ்நாத் சிங், வாஜ்பாயின் நகைச்சுவையான சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
பாகிஸ்தான் பயணத்தின் போது, பெண் ஒருவர் வாஜ்பாயிடம், தன்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என கேட்டார். அதற்கு அவர் எங்களுக்கு காஷ்மீரை கொடுத்து விடுங்கள் என கேட்டார். மேலும் வாஜ்பாய் பெண்ணிடம் உங்களை திருமணம் செய்து கொள்ள நான் தயார். ஆனால், வரதட்சணையாக எனக்கு பாகிஸ்தான் வேண்டும் என பதில் அளித்தார். மேலும் வீர்பத்ர சிங் முதல்வராக பதவி வகித்த கூட்டத்தில் வாஜ்பாயும் பங்கேற்ற போது அமைச்சர்கள் ஜென்டிலானவர்கள் (பத்ரா), ஆனால் வீரம்தான் (வீர்) இல்லை என நகைச்சுவையாக வாஜ்பாய் விமர்சித்தார். அதையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் இதை நினைவுகூர்ந்தார்.