குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்காக தமிழகத்துக்கு ரூபாய் 128 கோடி நிதி- மத்திய அரசு தகவல்

குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்காக தமிழகத்துக்கு நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த ஆண்டு ரூபாய் 128.7 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2024-11-07 06:41 GMT

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 'மிஷன் வாத்சல்யா' என்ற குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தை பருவத்தை பாதுகாத்து அவர்களின் முழு திறனை கண்டறிந்து முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.மேலும் குழந்தைகள் வளர்ச்சிக்கு ஆதரவான மற்றும் ஏற்புடைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும். இளம் சிறார் நீதி சட்டம் 2015 செயல்படுத்துவதில் மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களுக்கு உதவுதல் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது உள்ளிட்டவற்றை பிரதானமாக கொண்டு செயல்படுகிறது.

மிஷன் வாத்சல்யா திட்டத்திற்கு கடந்த ஆண்டு மாநிலங்கள் வாரியாக எவ்வளவு விடுவிக்கப்பட்டது என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்துக்காக ரூபாய் 1,341 கோடியே 67 லட்சம் விடுவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழகத்துக்கு ருபாய் 128.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் ரூபாய் 51.03 கோடியும் 2021-22 ஆம் ஆண்டில் ரூபாய் 76.7 கோடியும் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி இருக்கிறது. இதே போல கடந்த ஆண்டு மராட்டியத்துக்கு ரூபாய் 95.38 கோடியும் கர்நாடகாவுக்கு ரூபாய் 90.94 கோடியும் புதுச்சேரிக்கு ₹5.67 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. கோவாவுக்கு 'மிஷன் வாத்சல்யா' திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News